திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 44.) இவர் பாலக்கரை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பத்துடன் சங்கிலியாண்டபுரத்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனது மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார். இது குறித்து இளையராஜாவின் மனைவி பாலகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் கடந்த 1 -ந் தேதி அன்று வீட்டிற்கு வந்த இளையராஜா அங்கு இருந்த தனது மனைவி மற்றும் மகளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இளையராஜா தனது மனைவி மற்றும் மகளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார் .இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இளையராஜா ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
