தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மதியம் 2.15 மணி வரையிலான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 110 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 65 தொகுதிகளிலும், அதிமுக தலைமையிலான கூட்டணி 59 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.நாம் தமிழர் கட்சி எந்தத் தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. மொத்தம் 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டும் நிலையில், தவெக தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையம் அமைத்துள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் எண்ணிக்கைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் சுற்று முடிவுகளுக்குப் பிறகு பல தொகுதிகளில் முன்னிலை மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான இந்தத் தேர்தலின் இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் அமைதியுடனும், பொறுமையுடனும் முடிவுகளுக்காகக் காத்திருக்குமாறு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
