Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு

இந்திய செய்தி​யாளர்கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோ​ருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்​கப்​பட்டுள்​ளது.

அமெரிக்க செய்​தி​யாளர் ஜோசப் புலிட்​சர் நினை​வாக, அமெரிக்​கா​வின் கொலம்​பியா பல்​கலைக்​கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதன்​படி இதழியல், இலக்​கி​யம், உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு நேற்று முன்​தினம் புலிட்​சர் விருது அறிவிக்​கப்​பட்டது. இதில் இந்​திய செய்​தி​யாளர்​கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோர் உள்​ளனர்.

டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி தொடர்​பாக, ‘‘டி​ராப்​டு’’ என்ற பெயரில் முன்​னணி ஊடகத்​தில் விழிப்​புணர்வு கார்ட்​டூன் தொடர் வெளி​யானது. இந்த படைப்​புக்​காக ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா மற்​றும் ஜப்​பானை சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்​சனுக்கு புலிட்​சர் விருது அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பையை சேர்ந்த ஆனந்த் ஆர்​கே, இந்​திய கடற்​படை மற்​றும் பல்​வேறு தனி​யார் நிறு​வனங்​களுக்​காக புது​மை​யான கலை படைப்​பு​களை உரு​வாக்கி கொடுத்​திருக்​கிறார்.

டெல்​லியை சேர்ந்த செய்​தி​யாளர் சுபர்ணா சர்​மா, அல் ஜெசீ​ரா, பிபிசி, இந்து குழு​மத்​தின் பிரன்ட்​லைன் இதழ் உள்​ளிட்ட பல்​வேறு ஊடகங்​களில் செய்​தி​கள், கட்​டுரைகளை எழு​தி​யுள்​ளார். ஜப்​பானை சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்​சன் பிரதமர் மோடி​யின் அரசி​யல்​ வளர்​ச்​சி குறித்​துஅவர்​ எழு​திய செய்​தி​கள்​, கட்​டுரைகள்​ உலக அளவில்​ பெரும்​ கவனத்​தை ஈர்​த்​தன.

error: Content is protected !!