Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கூட்டணியிலிருந்து காங்., விலகியதில் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சி- ஆர்.எஸ்.பாரதி

திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று, தவெக கூடாரத்தில் தஞ்சம் புகுந்துள்ள காங்கிரஸ் கட்சியை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக சாடி இருக்கிறார். எங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதில் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றார்.

கூட்டணியை முறித்து கொண்டுள்ளது தொடர்பாக ராகுல் காந்தியோ, காங்கிரஸ் தலைமையோ திமுக-வை தொடர்பு கொண்டு ஏதாவது சமாதானப்படுத்தினார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆர்.எஸ்.பாரதி, எங்களுக்கு அதை பற்றி கவலையில்லை, தலைக்குமேல் வெள்ளம் போனபின்பு, ஜான் என்ன, முழம் என்ன. அவர்கள் கூட்டணியில் இல்லை என்றால் அவர்கள் இல்லாமல், அவர்கள் எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து அரசியல் செய்வோம், கட்சியையும் நடத்துவோம் என்றார்.

காங்கிரஸின் இந்த முடிவு நாடு முழுவதும் இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்துமா என்ற கேள்விக்கு, இந்தியா கூட்டணியே தற்போது இல்லை, நாடாளுமன்ற தேர்தலோடு அது முடிந்துவிட்டது. நிதீஷ் குமார், மம்தா பானர்ஜு என ஒவ்வொருவராக சென்று விட்டார்கள். இந்தியா கூட்டணியில் இருந்தது நாங்கள் மட்டும் தான். அவர்கள் தான் இப்போது வெளியே செல்கிறார்கள். நன்றிகெட்டவர்கள் போகட்டும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக-வை தடுத்து நிறுத்தவே தவெக-வுடன் செல்வதாக காங்கிரஸ் கூறுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆர்.எஸ்.பாரதி, இந்தத் திருவிளையாடல்களுக்கெல்லாம் யார் காரணம் என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும், அப்போது இப்படி பேசுகிறவர்கள் தலைகுனிந்து நிற்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!