திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில், ரயில்வே ஊழியர்களுக்கு “ரயில் சேவா புரஸ்கார்” விருது வழங்கும் விழா, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் மஹாலில் நடைபெற்றது. இதில் ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நெஹி கலந்து கொண்டு பொறியியல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 30 ஊழியர்களுக்கு, அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி ரயில் சேவா புரஸ்கார் விருதுகளை வழங்கினார்.

