Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; தொழிலாளி பரிதாப பலி

தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில், இன்று சனிக்கிழமை மாலை எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 60-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட இந்த ஆலையில், விபத்து நடந்த சமயத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சனிக்கிழமை என்பதால் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் திடீரென வெடி விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டுச் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!