சேலம் மாவட்டம் எடப்பாடி சின்னமலனி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்(35). இவரது மனைவி மாலதி வயது 29. இவர்கள் தங்களது குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு இருவரும் குடும்பத்திற்கு தேவையான பீரோ மெத்தை உள்ளிட்ட சாமான்களை லோடு வேனில் ஏற்றிக்கொண்டு கும்பகோணத்தில் தங்கி வேலை பார்ப்பதற்காக நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். சிவராஜ் வண்டியை ஓட்டி வர அருகில் அவரது மனைவி மாலதி அமர்ந்திருந்தார். இன்று காலை கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸில் வந்து

கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தில் சிவராஜ் ஓட்டி வந்த லோடு வேன் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வண்டியில் அமர்ந்திருந்த சிவராஜ் மனைவி மாலதி கீழே விழுந்து தலையில் அடிபட்டு அதே இடத்தில் துடிதுடிக்க பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சிவராஜ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த மாலதியின் உடல் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் தங்கி வேலை பார்க்க வந்த தம்பதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
