கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நிறைவடைந்த நிலையில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, மற்றும் results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்க மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.
மேலும், மாணவர்களின் வசதிக்காக அவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாகவும் மதிப்பெண் விவரங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் எனத் தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
