தஞ்சை மாவட்டத்தில் 111 தேர்வு மையங்களில் 105 அரசு பள்ளிகளும், 40 அரசு உதவி பெறும் பள்ளிகளும் மற்றும் 84 தனியார் பள்ளிகள் என 229 பள்ளிகளில் பயிலும் 12,151 மாணவர்கள், 13,793 மாணவிகள் உட்பட மொத்தம் 25,944 பேர் தேர்வெழுதினர்.
இதில் மாணவர்கள் 11670, மாணவிகள் 13545 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.04, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.60.
வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 97.24 ஆகும். 81 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 7ம் இடம் பிடித்துள்ளது.
