போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால், தவெகவை ஆஆட்சிமைப்பது தொடர்பாக காங்கிரஸைத் தவிர வேறு எந்த கட்சிகளும் இன்னும் முடிவை அறிவிக்காததால், முதல்வராக பொறுப்பேற்பதில் விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. கவர்னரும் ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதம் இருந்தால் மட்டுமே, ஆட்சியமைப்பதற்கான அழைப்பை விடுக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். கவர்னரின் இந்த செயலை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ், கவர்னரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்படும் மத்திய பாஜ அரசையும், கவர்னரையும் கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (மே 8) காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் மாநிலத் தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெறும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
