ஜெயங்கொண்டம் அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று கோகிலாம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
மாவட்ட ஆட்சியர் ஆகி மக்களுக்கு சேவை செய்வதே விருப்பம் என பேட்டி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கோகிலாம்பாள் மெட்ரிக் பள்ளி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இதில் அப்பள்ளியில் பயின்ற மாணவி ரிக்க்ஷிதா என்பவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:- தமிழ்-99, ஆங்கிலம்-99, இயற்பியல்-100, வேதியல்-100,, உயிரியல்-100, கணிதம்-100
என மொத்த மதிப்பெண்கள் 600க்கு 598 பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பின்னர் சாதனை மாணவிக்கு கோகிலாம்பாள் பள்ளி தாளாளர் அன்பழகன் மற்றும் இயக்குனர்கள் சுயம்பிரகாஷ், அவினாஷ் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
பின்னர் இதுகுறித்து கோகிலாம்பாள் மெட்ரிக் பள்ளியில் பயின்ற மாணவி ரிக்க்ஷிதா தெரிவிக்கையில்
பிளஸ் டூ பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். அதற்காக கடும் முயற்சி செய்து பயின்றேன். பள்ளி நிர்வாகத்தில் சிறப்பு பயிற்சி எனக்கு அளிக்கப்பட்டது. அதன் வாயிலாக நான் தற்போது 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன். மாவட்ட ஆட்சியராகி பொதுமக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்றும் என்னைப் போன்ற மாணவர்கள் நன்கு பயிற்சி எடுத்து புரிந்து கொண்டு படித்தால் அதிக மதிப்பெண் எடுக்கலாம் எனவும் அவர் கூறினார்.
