Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணல் கடத்தல் லாரி பறிமுதல்… டிரைவர் தப்பி ஓட்டம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், மணிகண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணி மற்றும் போலீசார் நேற்று காலை சேதுராப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்த முயன்றனர். போலீசாரைக் கண்டதும் டிரைவர் லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பியோடிவிட்டார்.
போலீசார் லாரியைச் சோதனை செய்ததில், அதில் அனுமதியின்றி ஒரு யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், லாரியை ஓட்டி வந்தது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த தர்மதுரை (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!