திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலுமே வெற்றி பெற்றார். பின்னர், தேர்தல் விதிகளின் படி, திருச்சி கிழக்கு MLA பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், அத்தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதத்திற்குள் இங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.
