Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடிகள் காரணமாக இந்தியா முழுவதும் மறுதேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முழுமையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பெட்ரோல்–டீசல் விலை உயர்வை கண்டித்தும், மேலும் எதிர்க்கட்சிகளை ஒதுக்குவதற்காக சிபிஐ இயக்குனர் பிரவீன் சூட் அவர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் நீட் தேர்வு நடைபெறக்கூடாது என்றும், மத்திய அரசு உடனடியாக தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும், எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் கூறி கண்டன கோஷம் எடுப்பினர்.

error: Content is protected !!