மத்திய சென்னை கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக TTV தினகரனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கட்சி தொடங்கியதற்கான நோக்கத்தை மறந்துவிட்டு EPS-க்கு துதி பாடும் உங்களது சுயநலத்தால் விலகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, திருச்சி & ராமநாதபுரம் அமமுக மா.செ.,க்கள் செந்தில்நாதன், முருகன் ஆகியோரும் கட்சியில் இருந்து விலகினர்.
சற்றுமுன் விலகினார்.. டிடிவிக்கு அடுத்த அதிர்ச்சி
