திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தூர்வாரப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான திருச்சி மலைக்கோட்டை அடிவாரம் என்.எஸ்.பி ரோடு பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் நீர் முழுவதும் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
NSB சாலையில் உள்ள 20,984 சதுர மீட்டர் பரப்பளவும், 3.50 மீ ஆழமும், 73,444 கனமீட்டர் கொள்ளளவும் கொண்ட இந்த தெப்பக்குளமானது கடந்த 1995ஆம் ஆண்டு தூர்வாரப்பட்ட நிலையில், அதன் பின்னர் தெப்பக்குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் மற்றும் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்கப்பட்டதாலும், தெப்பக்குளம் மாசடைந்து துர்நாற்றம் எழுந்த நிலையில் பொதுமக்கள்

மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் உயிர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இன்றைய தினம் திருச்சி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் பங்களிப்புடன் 25 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியானது இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்ட நிலையில் இன்றையதினம் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வணிகர் சங்க பேரவை மாநில பொதுச்செயலாளர்

கோவிந்தராஜுலு ஆகியோர் முன்னிலையில் பூமிபூஜை நடைபெற்று பின்னர் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மூலம் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தொடங்கி வைத்தார். நிகழ்வுக்கு பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜு தமிழ்நாடு வணிகர் சநிகழ்வுக்கு
பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வெ. கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்
திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், மங்கள அண்ட் மங்கள் உரிமையாளர் மூக்கப் பிள்ளை, ஆனந்தா கார்ப்பரேஷன் ரமேஷ்,மாநில இணைச்செயலாளர் தீபக் ராஜா, திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், திருச்சி மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், திருச்சி மாநகர செயலாளர் வி.பி. ஆறுமுகப்பெருமாள், உதவி ஆணையர் சசிகலா,உதவி செயற் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மலைக்கோட்டை கோவில்அறங்காவலர் குழுத் தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கூறுகையில்… திருச்சி மாநகராட்சி மூலம் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் தெப்பக்குளத்தை சுற்றிலும் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வணிகர்சங்க பேரவை பங்களிப்புடன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணி தொடங்கியுள்ளதாக இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியிணை தெரிவித்துக் கொண்டார்.
தெப்பக்குளத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் வியாபாரத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, காலம் காலமாக இங்கு வியாபாரம் செய்து வந்த வணிகர்களுக்கு மாற்றிய இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது, இந்த தெப்பக்குளத்தை அழகுபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, நடைபாதை அழகுபடுத்தப்பட்டு மாலை வேலைகளில் பொதுமக்கள் நடை பயிற்சி சென்று அமர்வதற்கும் எதுவாக அம்சங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்
ஒளி ,ஒலி கண்காட்சி தெப்பக்குளத்தில் நடைபெற்று வருகிறது, மேலும் படகு சவாரி செய்வதற்கும் அரசுடன் ஆலோசித்து அதனை மேற்கொள்ள பரிசீலனை செய்யப்படும் மேலும் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களை தடுக்க போலீசார் உடன் கலந்து ஆலோசித்து ரோந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
