Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வைகை அணையின் நீர்மட்டம் 26 அடியாக குறைவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 26 அடியாகக் குறைந்து, அணை தற்போது சிறிய குளம் போல் காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு பருவ மழையின் அளவு குறைந்ததாலும் பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கோடை வெயில் மற்றும் போதிய மழையின்மையால் அணையின் நீர் மட்டம் கடுமையாக சரிந்துள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 6091 மில்லியன் கன அடியில் தற்போது வெறும் 246 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பில் உள்ளது. இந்த நீர் நிலை தொடர்ந்தால், குடிநீர் தேவைக்கு இன்னும் சுமார் 17 நாட்கள் மட்டுமே தண்ணீர் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அணைப்பகுதியில் 10 முதல் 15 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளதால், சுமார் 6 அடி தண்ணீர் மட்டுமே பயன்பாட்டிற்கு உள்ளது. இதனால் வைகை அணையை முதன்மை நீராதராமாகக் கொண்டுள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது. தென்மேற்கு பருவ மழை கைகொடுத்தால் மட்டுமே இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க முடியும் என பொதுபணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!