சென்னை புழல் சிறையில் இருக்கும் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக் காளியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவரை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் போது சலுகை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வெள்ளைக்காளியிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு சலுகை வழங்கிய இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் அழைத்துச் சென்று விட்டு திண்டுக்கல்லில் இருந்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி புழல் சிறை நோக்கி போலீஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் போலீசார் மற்றும் ரவுடி வெள்ளைக்காளி ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது 15 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடியது. வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டவர்களில் கொட்டு ராஜா என்பவரை, சில தினங்களில் போலீசார் என்கவுண்டர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய மாதங்களில் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போது ஆய்வாளர் மாரிமுத்து போலீஸ்காரர்கள் திருமுருகன், செல்லத்துரை ஆகியோர் ரவுடி வெள்ளைக்காளியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சலுகை வழங்கியுள்ளதாக காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளியிடம் வெடிகுண்டு வீசிய கும்பலில் இருந்த கொட்டு ராஜாவை கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசார் என்கவுண்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெள்ளைக்காளியிடம் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, போலீஸ்காரர்கள் திருமுருகன், செல்லதுரை ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை மொடக் உத்தரவிட்டார்.
