திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டு எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்பொழுது இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாவட்டங்களில் உள்ள கட்சி அலுவலகத்தை கைப்பற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதே நேரம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வேலுச்சாமி தரப்பு ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.
இதனையடுத்து திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே எவ்வித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினரும் நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ ஆதரவாளருமான நெப்போலியன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதிபிடம் மனு அளித்துள்ளார். அதில் இருதரப்பினர் இடையே எவ்வித மோதல் போக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக அலுவலகத்தை பூட்டி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் கட்சி அலுவலகத்திற்கு வரக்கூடாது என்பதற்காக அலுவலகம் பூட்டப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
