Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாப்பிள்ளைக்கு 1.5 கிலோ வெள்ளியில் செருப்பு பரிசு.. விநோதம்

மகாராஷ்டிராவில் தற்போதைய ஆதிக் மாசத்தை முன்னிட்டு, மருமகனுக்கு மாமனார் ஒருவர் 1.5 கிலோ எடையுள்ள வெள்ளிச் செருப்பைப் பரிசளித்துள்ள விநோதச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகப் புகழ்பெற்ற கோலாப்பூர் பாரம்பரிய வடிவமைப்பில் செய்யப்பட்ட இந்தச் செருப்பு, 1.5 கிலோ தூய வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.4.5 லட்சம் ஆகும்.

கோலாப்பூரைச் சேர்ந்த திறமைமிக்க வெள்ளி கைவினைஞர்கள் சுமார் 8 நாட்கள் கடினமாக உழைத்து இந்த பிரத்யேக வெள்ளிச் செருப்பை வடிவமைத்துள்ளனர். இதற்கான கூலியாக மட்டும் ரூ.22,000 வழங்கப்பட்டுள்ளது.

சாங்லி (Sangli) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், ஐரோப்பாவில் வசிக்கும் தனது அன்பு மருமகனை கௌரவிப்பதற்காக இந்த அசத்தல் பரிசைத் தயாரித்துள்ளார்.

மராட்டிய கலாச்சாரத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ‘அதிக மாசம்’ ) மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில், தங்கள் வீட்டு மகளைத் திருமணம் செய்து கொண்ட மருமகனை (ஜாவாய்) வீட்டிற்கு அழைத்து, அவருக்குத் தங்கம் அல்லது வெள்ளிப் பொருட்களைப் பரிசாக வழங்கி கௌரவிப்பது மராட்டியர்களின் நீண்டகால பாரம்பரிய வழக்கமாகும்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விண்னைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ள போதிலும், பாரம்பரிய பாசத்திற்கு முன்னால் விலை ஒரு பொருட்டல்ல என்பதை இந்த மாமனாரின் பரிசு நிரூபித்துள்ளது!

error: Content is protected !!