Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலைவாய்ப்பு… 268 பணியிடங்கள்- 10th தகுதி போதும்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அலுமினியம் நிறுவனத்தில் (NALCO – National Aluminium Company Limited) காலியாக உள்ள 268 நான்-எக்ஸிகியூட்டிவ் (Non-Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலிப்பணியிடங்கள் விவரம்: மொத்த காலிப்பணியிடங்கள்: 268

பணிகள்: ஆப்ரேட்டர் (Operator), டெக்னீசியன் (Technician), ஜூனியர் போர்மேன் (Junior Foreman), லேபரட்டரி அசிஸ்டண்ட், மைனிங் மேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பப் பணியிடங்கள்.

தகுதி மற்றும் வயது வரம்பு: கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பணியைப் பொறுத்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ (Diploma) அல்லது B.Sc (Chemistry) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: பணியிடங்களுக்கு ஏற்ப 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசின் விதிமுறைப்படி எஸ்சி/எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு).

முக்கிய தேதிகள் மற்றும் கட்டணம்: விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: மே 21, 2026

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 10, 2026

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு ₹100. (SC/ST/மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது).

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் தேர்வு (Computer Based Test – CBT)

தகுதித் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு (Trade Test / Document Verification)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நால்கோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையதளத்தின் ‘Careers’ பகுதிக்குச் சென்று, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.

error: Content is protected !!