தஞ்சையில் ஏசி வெடித்து இளைஞர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;”தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கிராமம், சாந்தபிள்ளை கேட் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் 18.05.2026 அன்று உணவகத்தின் குளிரூட்டி (Air Conditioner) பழுது பார்க்கும் பணியின் போது கம்ப்ரசர் (Compressor) வெடித்து ராஜ், ( 27), என்பவர் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் கதிரேசன் (42), பிரேம்குமார் (26), கணேசன் (40), அருண்குமார் (27), ஆகிய நான்கு நபர்களுக்கும் மற்றும் லேசான காயமடைந்து சிகிக்சை பெற்று வரும் அஜித்குமார் (27) ஆகியோருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாயும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிக்சை பெற்று வரும் நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
