Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 தொகுதிகளில் வென்ற முதல்வர் ரங்கசாமி: தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. அந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதனால் பெரும்பான்மை பெற்று, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியமைத்தது.புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்-மந்திரியாக 5-வது முறையாக ரங்கசாமி, கடந்த 13-ந்தேதி காலை 9.45 மணிக்கு பதவியேற்று கொண்டார். அவர் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் 2 தொகுதிகளிலும் ரங்கசாமி வெற்றி பெற்றார்.ஆனால் தேர்தல் விதிகளின்படி, 2 தொகுதிகளில் போட்டியிட்டால், 14 நாட்களில் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதன்படி, கடந்த 17-ந்தேதி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி இதற்கான கடிதத்தை சட்டசபை செயலர் தயாளனிடம் வழங்கினார்.அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக புதுச்சேரி சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான கடிதம் ஒன்று தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு 6 மாதத்துக்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கும்.எனினும், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவரான பேராசிரியர் ராமதாஸ் கூறும்போது, 2 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை சட்டம் அனுமதிக்கிறது என்றபோதும், இதுபோன்ற செயல்கள் பொதுமக்களுக்கு தேவையற்ற சுமையை திணிக்கின்றன.இதனால், அரசு நிர்வாகம், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும். குறுகிய காலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும். மீண்டும் காலியான அந்த தொகுதியில் தேர்தலுக்காக மக்கள் தயாராக வேண்டும் என்று கூறினார். தேர்தலுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பிற்காக பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படும் என்று கூறினார்.

error: Content is protected !!