கடலூர்: சிதம்பரம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். பாலகிருஷ்ணன் (43), சித்தப்பா மகன் ராமகிருஷ்ணன் (37) நேற்று அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். சொத்து தகராறில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக தந்தை, மகன்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
