விவசாயியின் மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 498 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி தருணிகா, தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 என மொத்தம் 498 மார்க்குகள் எடுத்து பள்ளி ஆசிரியர்களையும் பெற்றோரையும் பெருமைப்படுத்தியுள்ளார். நீங்களும் இவரை வாழ்த்தலாமே!
