தொடர் விடுமுறையை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் – சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் பெரிய கோவிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தொடர் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து பெரிய கோவிலில் அழகை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நீண்ட வரிசையில் நின்று பெருவுடையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.
