Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் பயிற்சியை துவக்கிய தோனி…

பதினாறாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வருகிற 31ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடர் பயிற்சிக்காக நேற்றிரவு சென்னை வந்த சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர்தூவி உற்சாகமான வரவேற்பு அளித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது . தோனி இன்று பயிற்சியை தொடங்கினார். ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, சுப்ரன்ஷூ சேனாபதி உள்ளிட்ட வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!