Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

22 பில்லியன் டாலரிலிருந்து சிறை தண்டனை வரை! BYJU’S நிறுவனத்தின் அதிர்ச்சி வீழ்ச்சி

இந்தியாவின் மிகப்பெரிய எடுடெக் நிறுவனத்திற்கு என்ன ஆனது?

ஒருகாலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய எடுடெக் நிறுவனமாக பேசப்பட்ட BYJU’S இன்று உலகம் முழுவதும் சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறது. நிறுவன founder ஆன Byju Raveendran மீது சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்திருப்பது இந்திய ஸ்டார்ட்அப் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட BYJU’S, போட்டித் தேர்வுகளுக்கான ஆன்லைன் கல்வி தளமாக வேகமாக வளர்ச்சி பெற்றது. குறிப்பாக கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டபோது ஆன்லைன் கல்விக்கு ஏற்பட்ட தேவையால் நிறுவனத்தின் மதிப்பு 2022 ஆம் ஆண்டில் 22 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியிலும் BYJU’S லோகோ இடம்பெற்றது.

ஆனால் அதன்பிறகு நிலைமைகள் மாற ஆரம்பித்தன. கணக்கு தாக்கல் தாமதம், கடன் பிரச்சினை, முதலீட்டாளர்களின் எதிர்ப்பு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை போன்ற பிரச்சினைகள் BYJU’S நிறுவனத்தை சிக்கலில் தள்ளின.

1.2 பில்லியன் டாலர் கடன்… அதுவே வீழ்ச்சிக்கான தொடக்கம்?

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் மோசமான மோதல்

2021 ஆம் ஆண்டு BYJU’S நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து 1.2 பில்லியன் டாலர் கடன் பெற்றது. ஆரம்பத்தில் இது இந்திய ஸ்டார்ட்அப் உலகின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்ற கேள்வி எழ ஆரம்பித்தது.

நிறுவனத்தின் audit report தொடர்ந்து தாமதமாக வெளியானது. Deloitte போன்ற பெரிய audit நிறுவனங்களும் BYJU’S உடன் இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தன. இதனால் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் நிதி வெளிப்படைத்தன்மையை சந்தேகிக்க தொடங்கினர்.

அதுமட்டுமல்லாமல், சுமார் 533 மில்லியன் டாலர் தொகை சரியான விளக்கம் இல்லாமல் மாற்றப்பட்டதாக கடன் வழங்கியவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.

சிங்கப்பூர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

சொத்து விவரங்களை மறைத்ததால் 6 மாத சிறை

சிங்கப்பூர் நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக BYJU’S founder Byju Raveendran மீது contempt of court வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2024 முதல் சொத்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்தது.

இதன் விளைவாக, அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், சுமார் 90,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் Beeaar Investco Pte என்ற நிறுவனத்தின் உரிமை ஆவணங்களையும் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு BYJU’S நிறுவனத்தின் நெருக்கடியை இன்னும் மோசமாக்கியுள்ளது. தற்போது இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரிலும் BYJU’S மீது பல வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய ஸ்டார்ட்அப்புகளுக்கு எச்சரிக்கை மணி?

வேகமான வளர்ச்சி… ஆனால் நிர்வாகத் தவறுகள்!

BYJU’S வீழ்ச்சி தற்போது இந்திய ஸ்டார்ட்அப் உலகிற்கு பெரிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. அதிக கடன் வாங்கி வேகமாக விரிவாக்கம் செய்தாலும், சரியான நிர்வாகம் மற்றும் நிதி கட்டுப்பாடு இல்லையெனில் பெரிய நிறுவனங்களும் சரிந்து போகலாம் என்பதற்கான உதாரணமாக BYJU’S மாறியுள்ளது.

ஒருகாலத்தில் இந்தியாவின் startup icon ஆக இருந்த Byju Raveendran இன்று உலக நாடுகளில் சட்டப் போராட்டங்களை சந்தித்து வருவது தொழில்நுட்ப உலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

error: Content is protected !!