கரூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓரிரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியை காவலர் தாக்கியதாக குற்றச்சாட்டு – காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரல்.
கரூரில் பாட்டுக்கச்சேரி குழுவில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர், சந்தேகத்தின் பேரில் “எதற்காக இங்கு நிற்கிறாய்?” எனவும், எந்த ஊர் என விசாரித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த காவலர் இளைஞரின் கன்னத்தில் அறைந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இளைஞருடன் வந்த நபர்களும் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மற்ற காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சமாதானப்படுத்த முயன்றனர். இதற்கிடையில், சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துதுள்ளார். அதை கவனித்த காவலர் செல்போனை தட்டி விட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக ராமச்சந்திரன் என்பவர் பழைய பேருந்து நிலையம் முன்பு மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார் அப்போது காவல்துறை அவரை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அப்போது இரு சக்கர வாகனத்தில் இருவர் வேகமாக சென்றுள்ளனர் அதனைத்

தொடர்ந்து இரண்டு காவலர்கள் சென்று விசாரித்த போது ஒன்றும் பேசாமல் பின்னர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.
