Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடன் தொல்லையால் மனைவி, 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்று விவசாயி தற்கொலை

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் தேவரகத்ரா அடுத்த டோகூரைச் சேர்ந்தவர் கங்கலா நரசிம்மலு(36). இவர் ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாசராவிடம் 4 ஆண்டுகளுக்கு முன் 50 ஏக்கர் மாந்தோப்பை குத்தகை எடுத்து பயிரிட்டு வந்தார்.

இதற்காக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் குத்தகை செலுத்திவிடுவதாக ஒப்பந்தம் செய்திருந்தார். மேலும், சீனிவாசராவிடம், தனக்கும், மனைவிக்கும் சிகிச்சைக்காக பணத்தை கடனாக வாங்கியுள்ளார். இதனால் ரூ.60 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடன் கொடுத்தவர் ரூ.1.20 கோடி கடன் பாக்கியுள்ளதாக ஆவணங்களில் எழுதி கையெழுத்து பெற்றுள்ளனர். மேலும் பணத்தை உடனே தரும்படி நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த நரசிம்மலு, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி நரசிம்மலு, தான் கடன் பெற்ற இடத்தில் ரூ.3 வட்டிக்கு பணம் செலுத்தி வந்ததாகவும், அதனால் தனக்கு ரூ.2 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. மேலும் கடன் தொல்லை தாங்க முடியாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என நேற்று வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார். பின்னர் நரசிம்மலு, மனைவி ஹேமலதா(31), மகன் சாய்நிஹால்(15), மகள் சாகிதி(13) ஆகியோரின் கைக்கால்களை கட்டி விவசாய கிணற்றில் தள்ளியுள்ளார்.

இதில் 3பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். பின்னர் நரசிம்மலு தோப்பில் உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!