Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவனந்தபுரத்தில் பயங்கரம்: பூங்காவில் ராட்டினக் கம்பி முறிந்து விபத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஹேப்பி லேண்ட் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அங்குள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் பலர் ஏறி மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் கம்பி திடீரென முறிந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் நாகர்கோவில் சேர்ந்த 2 பெண்கள் 3 குழந்தைகள் என 5 பேர் படுகாயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி காயமடைந்த அந்த 5 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் காயமடைந்தவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!