Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொடர் ஆடு திருட்டு-அரியலூர் 5 பேர் கைது..

அரியலூர் மாவட்டத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் பறிமுதல் மற்றும் 27 ஆடுகள் மீட்கப்பட்டன.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், விக்கிரமங்கலம், மீன்சுருட்டி மற்றும் தா.பழூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சில மர்ம நபர்கள் காரில் வந்து ஆடுகளை திருடி செல்வதாக புகார்கள் வந்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இது குறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.தினேஷ் குமார் அவர்கள் வழிகாட்டுதலின்படி, மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு.பழனிவேல் அவர்கள் தலைமையிலான தலைமை காவலர்கள் திரு.மணிவண்ணன் திரு.மாரிமொழி , திரு.தியாகராஜன் மற்றும் காவலர்கள் திரு.அப்துல் ரகுமான் திரு. ஐயப்பன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் 28.05.2026 இன்று, தனிப்படை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் 27 ஆடுகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட 5 நபர்களும், அரியலூர் மாவட்ட காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

error: Content is protected !!