அதிமுகவின் செல்வாக்கு மிக்க நிர்வாகிகளில் ஒருவரான சி.விஜயபாஸ்கர், தனது விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியைக் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென ராஜினாமா செய்தார். சொந்தக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டாலும், கட்சி உள்விவகாரங்கள் அல்லது புதிய அரசியல் நகர்வுகள் காரணமாகவே அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என்ற பேச்சுகள் பரவலாக எழுந்தன. இந்த குழப்பமான சூழலுக்கு விடையளிக்கும் விதமாகவே இந்த ஆடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த உடனேயே சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள இந்த ஆடியோ பதிவு, அவர் சத்தமில்லாமல் ஏதோ ஒரு பெரிய அரசியல் வியூகத்தை வகுத்து வருகிறார் என்பதையே காட்டுகிறது. “இது முடிவல்ல; தொடக்கம்” என்ற அவரது வார்த்தைகள் வெறும் ஆறுதல் வார்த்தைகளா அல்லது புதிய அரசியல் திருப்பத்திற்கான கட்டியங்கூறலா என்பது மிக விரைவில் வெளிச்சத்திற்கு வரும். என்று தெரிவித்துள்ளார்
