மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாதக கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இதுபோன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவங்களில் தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் துரோகமாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
