பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி சென்ற 16ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று அதிலிருந்து தெருக்கள் வாரியாக மண்டகப்படி தொடர்ந்து

நடைபெற்று இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பால் குடங்கள் மண்ணப்பன் குளம் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மெயின் ரோடு பேருந்து

நிலையம் கிழக்குக் கடற்கரை சாலை கரையர் தெரு வழியாக திருக்கோவில் அடைந்தனர் . பின்னர் ஆலயத்தில் எதிரே அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் பக்தர்கள் தீயில் இறங்கினர் உள்ளூர் நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை பேராவூரணி மதுக்கூர் அதனை சுற்றியுள்ள 50க்கு மேற்பட்ட கிராம பகுதியில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
