Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹெல்மெட் அணிந்து சென்ற எம்.பி மீது முட்டை, கல் வீச்சு – மேற்கு வங்கத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில் 15 ஆண்டுகளாக முடிசூடா மன்னராக இருந்த மம்தா பானர்ஜியும், அவரது கட்சியுமான திரிணாமுல் காங்கிரசும் வீழ்த்தப்பட்டது. அம்மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தலுக்கு பின்பும் அங்கு மோதல், கலவரம் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனர்பூரைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.அபிஷேக் பானர்ஜி இன்று காலை சென்றார்.
அப்போது கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்து சென்றார். அவரை உள்ளூரைச் சேர்ந்த சிலர் வழி மறித்து தாக்குதல் நடத்தினர். அவர் மீது முட்டைகளையும் கல் வீசியும் தாக்குதல் நடத்தினர். அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டன. இவர் மீதான தாக்குதல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்றாலும், பாதிக்கப்பட்ட தொண்டரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், தன்னை தாக்கியவர்கள் பாஜக ஆதரவு பெற்றவர்கள். அவர்கள் என்னை கொல்ல விரும்பினர். இதுதான் ஜனநாயகத்திற்கான அவர்களுடைய உதாரணம். தேர்தல் முடிந்து ஒரு மாதம் கூட ஆகல. அதற்குள் இப்படி ஒரு தாக்குதல் என அபிஷேக் பானர்ஜி கடுமையாக பாஜக-வை விமர்சித்தார். இந்த சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்துவது புதியதல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் வெள்ளம் பாதித்த பகுதியை ஆய்வு செய்யச் சென்ற பாஜக எம்பி, எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்காளத்தின் டைமண்ட் ஹார்பர் தொகுதி மக்களவை உறுப்பினரும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தாவின் சகோதரர் மகன் தான் அபிஷேக் பானர்ஜி ஆவார்.

error: Content is protected !!