Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டெல்லி ஒன்றிய கல்வி அமைச்சக வளாகத்தில் தீ விபத்து

டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மத்திய டெல்லியில் ஐடிஓ பகுதியில் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சக வளாகத்தில் இயங்கும் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி (எஸ்பிஏ) அலுவலகத்தின் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக டெல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காலை நேரம் என்பதால் இந்த விபத்தில் உயிரிழப்புகளோ, காயமோ ஏற்படவில்லை.

இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் குளறுபடி என அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சக அலுவலகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!