Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமணமான சில மணி நேரத்தில் விமானத்தில் உயிரிழந்த மாப்பிள்ளை…

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட டேவ் பிஜி என்பவர் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த மே 29ம் தேதி டாசன்வில்லில் உள்ள தி ரிவியர் என்ற இடத்தில் டேவ் பிஜிக்கும், செவிலியராகப் பணியாற்றும் ஜெஸ்னி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, தம்பதியினர் ஹெலிகாப்டரில் அட்லாண்டாவிற்குப் புறப்பட்டனர். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டர் அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் டேவ் பிஜி மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

மணப்பெண் ஜெஸ்னி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.காயம் அடைந்த ஜெஸ்னி, ஆறு மணி நேரம் ஹெலிகாப்டர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடினார். அதன்பிறகு அவர் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பிஜியின் தந்தை ஜார்ஜ் பிஜி கூறியாதவது; டேவ் ஒரு விமானி என்பதால் வானிலை மோசமாக இருப்பதையும், பார்வைத் திறன் பூஜ்ஜியமாக இருப்பதையும் ஹெலிகாப்டர் பைலட்டிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில் பறக்கக்கூடாது என்று டேவ் எச்சரித்த போதிலும், அதிக உயரத்தில் பறக்கலாம் என்று கூறி பைலட் ஹெலிகாப்டரை இயக்கியதே இந்த சம்பவத்திற்கு காரணம், என்றார்.

இந்த விபத்து குறித்து அமெரிக்கத் தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

error: Content is protected !!