பணி நேரத்தில் மருந்து வழங்க ஊழியர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்த நோயாளிகள் பொதுமக்கள் அவதி.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும்- வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி நோயாளிகளுக்கு மருத்துவமனையில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை மருந்துகள் வழங்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 9 மணி வரை ஆகியும் மருந்து வழங்க

ஊழியர்கள் வராததால் இரண்டு மணித்துக்கும் மேலாக பொதுமக்களும் நோயாளிகளும் காத்துக் கிடத்திருந்து வருகின்றனர். உடம்பு முடியாமல் காத்திருப்பதாகவும் அமர்வதற்கு நாற்காலிகள் கூட இல்லாமல் நிற்பதால் தங்களுக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழு முப்பது மணிக்கு மருத்துவர் வந்த நிலையில் மருந்து வழங்கும் ஊழியர்கள் ஒன்பது மணி வரையும் வரவில்லை எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பாதிக்காதவாறு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
