இந்தியாவின் வனவிலங்கு & காடுகள் பாதுகாப்பு துறையின் முன்னோடியாக திகழ்ந்த ஹேமேந்திர சிங் பவார்(89) காலமானார். புலிகளை பாதுகாக்கும் ‘Project tiger’ திட்டத்தின் இயக்குநராகவும், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் இவர் செயல்பட்டுள்ளார். இவரின் தன்னிகரற்ற சேவையை பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2013-ல் பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது. இந்த விருதை வென்ற முதல் IFS ஆபீசரும் இவரே.
