அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது எனவும், தபால் வாக்குகள் மறு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் வெற்றி செல்லாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வேறு மாதிரி வந்துள்ளது. இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என பொருள் ஆகாது. ஆனால், இந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ. பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை இன்பதுரை உரிமையாக கேட்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபத் ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளர். 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது.
