Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொழிலாளியை அடைத்து வைத்து தாக்குதல்-2 ரவுடிகள் கைது

திருச்சி, ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (27). இவர் அரியமங்கலம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார் .
இவருக்கும் தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடிகள் பிரவீன் (வயது 27) மற்றும் லால்குடி கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த கலைப்புலி ராஜா என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் கடந்த 9ம் தேதி பிரவீன் குமாரை கலைப்புலி ராஜா தென்னூரில் உள்ள பிரவீன் வீட்டிற்கு அழைத்து வந்தார் அங்கு பிரவீன் குமார் மற்றும் பிரவீன் இடையே தகராறு ஏற்பட்டது இதில் ரவுடி பிரவீன் ரூ 2,500 பணத்தை பிரவீன் குமாரிடமிருந்து பறித்துக் கொண்டு அவரை வீட்டில் வைத்து கட்டையால் தாக்கி அறையில் பூட்டிவிட்டு சென்றார். பிறகு அருகிலிருந்தவர்கள் பிரவீன் குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு காயத்துடன் அவர் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து பிரவீன் மற்றும் கலைப்புலி ராஜா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!