Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளிகள் திறப்பு-கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம்-கரூர் போலீசார் விழிப்புணர்வு

கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம் குறித்தும்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் காவல்துறையினர்.

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டதால், ஏப்ரல் 17 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. முதலில் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடும் வெயில் காரணமாக மேலும் மூன்று நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்களுக்கு சுமார் 49 நாட்கள் கோடை விடுமுறை கிடைத்தது.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வர நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.

புதிய கல்வியாண்டை வரவேற்கும் வகையில் பள்ளி வளாகம் உற்சாகமாக காணப்பட்டது.

இந்நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், அவசர காலங்களில் தொடர்புகொள்ள வேண்டிய சைல்டு ஹெல்ப்லைன் மற்றும் காவல்துறை உதவி எண்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலைகளில் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தகவல் கிடைத்தவுடன் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதிய கல்வியாண்டின் முதல் நாளிலேயே கல்வியுடன் பாதுகாப்பு விழிப்புணர்வும் மாணவர்களிடம் கொண்டு செல்லப்பட்டதால், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை வரவேற்றனர்.

error: Content is protected !!