Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது-இந்திய வானிலை மையம்

இந்தியாவில் விவசாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) கேரளாவில் தொடங்கியுள்ளது குறித்து இந்திய வானிலை மையம் (IMD) அறிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4, 2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

கேரளாவில் தொடங்கியுள்ள இந்த பருவமழை, படிப்படியாக நகர்ந்து ஜூலை முதல் வாரத்திற்குள் நாடு முழுவதும் முழுமையாகப் பரவக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜூன் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு எல் நினோ போன்ற வானிலை மாற்றங்களின் தாக்கத்தால், சில நாட்கள் தாமதமாகத் தொடங்கியுள்ளது.

பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் ‘ஆரஞ்சு’ மற்றும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கைகளை வானிலை மையம் விடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அடுத்த சில நாட்களில் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!