கம்பி கேட் திருடிய வாலிபர் கைது
திருச்சி, உய்யக்கொண்டான் திருமலை சண்முக நகர் மேற்கு தெற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (59) இவர் ரயில்வே கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார்.
சம்பவத்தன்று ரயில்வே கூட்டுறவு சங்கத்தின் கம்பி கேட் திருடு போனது இது குறித்து அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கம்பி கேட் திருடிய அரியமங்கலம் கிருஷ்ணா தெருவை சேர்ந்த சபரிநாதன் ( 23 ) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெஞ்சுவலியால் லாரி டிரைவர் சாவு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (42), லாரி டிரைவர். இவர் மின்சாதன பொருட்களை தனியார் விற்பனை நிறுவனத்தில் இறக்கி வைக்க லாரியில் கேகே நகர் பகுதிக்கு வந்தார். அப்போது லாரியில் தூங்கிக் கொண்டிருந்தார் திடீரென நெஞ்சுவலியால் துடித்தார் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி,பாலக்கரை பங்காளி தெரு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி கஞ்சா விற்ற சரித்திர பதிவேடு ரௌடியான பாலக்கரை பங்காளி தெருவை சேர்ந்த வீரமுத்து ( 28 ) என்ற வாலிபரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பின்னர் அந்த வாலிபரை ஜாமினில் விடுவித்தனர்.
