தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூர், மெயின் ரோடு பகுதியில் குறிஞ்சி மளிகை கடை அமைந்துள்ளது..
இந்த மளிகை கடையை புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி பகுதியை சேர்ந்த ஜுபைர் பாஷா (46) என்பவர் கடந்த 16-ஆண்டுகளாக நடத்தி வருகிறார்..
இவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென எரிந்து மளிகை கடை முழுவதும் பரவி கடையில் இருந்த சுமார் 30-லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்து மளிகை பொருள்களும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன..
தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
தீ விபத்து குறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
