Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய கட்சி… அடுத்த தேர்தலில் போட்டி… அண்ணாமலை

Opposition party leaders holding a joint press conference in Chennai on June 12 2026 criticizing TVEK government performance.

பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அண்ணாமலை சமூகவலைதளம் வாயிலாக பேசினார்.. அவர் பேசியதாவது..

எனது முயற்சிகளுக்கு கட்சிக்குள் இருந்தும் வௌியில் இருந்தும் தொடர்ந்து தடைகள் வந்தன.

தேசிய கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ள இடைவௌியை போக்க பல முறை முயன்றேன்.

புதிய அரசியலை நோக்கி, புதிய இயக்கத்தை உருவாக்க வேண்டுமென பாஜகவில் இருந்து வௌியேறினேன். பாஜகவில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்.

பல்வேறு தடைகளை தாண்டி எனது அரசியல் பயணம் இருந்தது.

பிஎல் சந்தோஷ் மூலமாகத்தான் பாஜகவில் இணைந்தேன்.

பாஜகவில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். பாரம்பரிய தமிழன் பெருமைமிகு இந்தியன் என்பது தான் எனது அடையாளம். தமிழ்நாட்டின் நலன்கள் சார்ந்து தொடர்ந்து விவாதித்தேன்.

டிசம்பர் 4, 2025ல் கட்சியில் இருந்து வௌியேறும் முடிவை தலைமையிடம் தெரிவித்தேன்.

கடந்தாண்டு டிசம்பர் மாதமே பாஜகவில் இருந்து விலகுகிறேன் என தலைமையிடம் தெரிவித்தேன்.

2024ல் தனது இயக்கத்தில் இணைய ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். பாஜகவில் இணைய வரும் போது தான் ரஜினிகாந்த் என்னை அழைத்தார்.

பாஜக தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

ஆனந்தமாக அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். அடுத்த பொதுத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டி.

தமிழ்நாட்டின் அரசியல் மொழி , இலக்கணத்தை மாற்ற வேண்டும்.

நாம் அனைவருமே Common Man Politician.

Cult Politics-இல் இருந்து வௌியே வர வேண்டும்.

நம் கட்சியில் நிரந்தரத் தலைவர், நிரந்தர எம்பி, எம்எல்ஏ கிடையாது. அப்துல்கலாம் பெயரில் அரிசியல் பயிற்சி. www.wetheleader.org என்ற தளத்தில் இணையலாம். இணைபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!