Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூன் 10 வரை தமிழகத்தில் மழை – 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது:-
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 10-ந்தேதி வரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும்.
அதன்படி, தென்காசி, நெல்லை, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுகிழமை) பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை (8-ந் தேதி) தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இதேபோல, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும்.
9-ந்தேதி தென்காசி, நெல்லை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். வரும் 10-ந்தேதி நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக குறையும்.

சென்னையை பொறுத்தவரை இன்று நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 10-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதேபோல, அந்தமான் கடல் பகுதி, மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

error: Content is protected !!