Skip to content

ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சை – பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி, உடல் சிதைந்து சடலமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். விசாரணையில் திருவாரூரில் இருந்து தஞ்சைக்கு வந்த ரயில் என்ஜின் மோதி அந்த பெண் பலியானது தெரிய வந்தது. இவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பெண் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் என்ஜின் மோதி இந்த பெண் இறந்தாரா? அல்லது ரயில் என்ஜின் முன் பாய்ந்து அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!