அரியலூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் காவல் சிறப்பு படையை, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்ரமணியன் துவங்கி வைத்தார். அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பெண்களுடன் இணைந்து சிங்கப்பெண் சிறப்பு காவல் படை ரோந்து வாகனத்தை துவங்கி வைத்தார்.
பின்னர் அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிங்கப்பெண் காவல் சிறப்பு படையின் செயல்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்ரமணியம் விளக்கி கூறினார். சிங்கப்பெண் சிறப்பு காவல் படையின் ஒரே நோக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு தருவது மட்டும்தான்.
காலை ஆறு மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரு குழுவாக ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பெண்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிகள், கோவில், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் இந்த குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பெண்களுக்கு பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், அதனை தாராளமாக முன்வந்து சிங்கப்பெண் சிறப்பு காவல் படையினரிடம் தெரிவிக்கலாம். அதேபோல காவல் உதவி எண் 100 மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என்று பொதுமக்களிடம் விளக்கி கூறினார்.


